Thursday, August 4, 2011

உங்களுடைய வயர்லெஸ்ஸில் யார் யார் இணைந்திருக்கிறார்கள்

இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது.  அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது.   அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும். இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர்.  அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில்  ஏதோ நுழைவது போல கிடைத்தது வழி என்று அனைவரும் நுழைந்து  உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.

சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.

இந்த சிறிய மென்பொருள்  217 கேபி மட்டுமே

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address),  எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர்  என்றும் தெரிந்து கொள்ள முடியும்

மென்பொருள் தரவிறக்க முகவரி 

0 comments to “உங்களுடைய வயர்லெஸ்ஸில் யார் யார் இணைந்திருக்கிறார்கள்”

Post a Comment

 

இணையதள தகவல்கள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger